தலாய்லாமாவை சந்திக்காத டிரம்ப்… மிகப்பெரிய அவமானம்… ஜோ பிடன் அதிரடிப் பேச்சு…!!!

தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வேன் என ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாகவும் அதனால் ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் சீனா செய்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. அதுமட்டுமன்றி ஜோ பிடன் சீனாவின் மிகுந்த விசுவாசி எனவும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்கா முழுவதுமாக சீனாவின் வசம் சென்று விடும் என்றும் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திபெத்தில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என ஜோ பிடன் கூறியுள்ளார். மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஜோ பிடன் பேசும்போது, திபெத் மீதான கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக அதற்கான பல்வேறு திட்டங்களை சீன அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்ததை குறிப்பிட்டு பேசியுள்ளார். ஜோ பிடன் இது குறித்து கூறுகையில், ” திபெத்திய மக்களின் மனித உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் கௌரவத்தை சீன அரசு முழுவதுமாக சீர்குலைத்து கொண்டிருக்கிறது.

சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் நம்பிக்கையை பாதுகாக்க முற்படும் சிறுபான்மையினரை நசுக்குவதற்கு முயற்சி செய்யும் வகையில் இருக்கின்றது. நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் எனது நிர்வாகம் திபெத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கும். மேலும் வீடியோ பிரீ ஆசியா மற்றும் வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் திபெத்திய மொழி தேவைகளை நிறைவு செய்வேன்.

இதன் மூலமாக வெளியுலகத்தில் இருந்து வரக்கூடிய அனைத்து தகவல்களையும் திபெத்துக்குள் எளிதாக பெறமுடியும். அமெரிக்காவின் ஜனாதிபதியாக நான் தலாய்லாமாவை சந்திப்பேன். மேலும் திபேத்திய பிரச்சனைகளை ஆராய்வதற்கு புதிய சிறப்பு ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்வேன். அமெரிக்க தூதர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அமெரிக்க குடிமக்கள் திபெத்தை எளிதாக அணுகுவதற்கு அனைத்து வாய்ப்புகளையும் உண்டாக்குவேன்.திபெத் விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் கண்மூடித்தனமாக செயல்படுகின்றார்.

சீன கொள்கைகளில் அவர் பலவீனமடைந்துள்ளார். அவர் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் சீன அதிபரின் நட்பை பாதுகாக்கிறார். தலாய்லாமாவை சந்தித்து பேசுவதற்கு இயலாத முதல் அமெரிக்க ஜனாதிபதி என்பது டிரம்பிற்கு மிகப்பெரிய அவமானம். திபெத் பிரச்சினையில் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கட்டாயம் நியமிக்க வேண்டும் என்ற சட்ட ரீதியான தேவையை கூட பூர்த்தி செய்யவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *