தற்போது மாம்பழ சீசன்…. கண்டிப்பாக மாம்பழம் வெற்றி பெறும் – அன்புமணி ராமதாஸ்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற அலை தமிழகத்தில் வீசுகிறது. தற்போது மாம்பழ சீசன் என்பதால் கண்டிப்பாக மாம்பழம் வெற்றிபெறும் என்று  பேசியுள்ளார்.