தற்கொலை முடிவெடுத்த கார்த்தி பட நடிகை…. உருக்கமான வீடியோ வெளியிட்டார்….!!

பிரபல  இளம் நடிகை  தற்கொலை  முயற்சி  செய்ததாக  தகவல் வெளிவந்துள்ளது. 

தமிழில் பீமா, அரண், காசி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா. பிறகு ரேணிகுண்டா படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகினர் . இதைத்தொடர்ந்து எத்தன் ,கொடிவீரன், நாளை நமதே,அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளரர். இந்நிலையில்  நடிகை சனுஷா வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

கொரோனாவின் ஆரம்ப  கட்டம்  எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது.  இதில் சொந்த வாழ்க்கையிலும் மற்றும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டு வந்தன. எனது எண்ணங்கள் என்னை பயமுறுத்தின.  இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது.  இந்தப் பிரச்சனையை யாரிடம் பகிர்ந்து கொள்வது எனத் தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு நான் வந்தேன்.

அந்த நேரத்தில் மிகவும் பாசம் வைத்திருந்த எனது தம்பியை பற்றி நினைத்து பார்த்தேன் நான் இறந்து போனால் அவனால்  தாங்கிக்கொள்ள முடியாது என உணர்ந்து  தற்கொலை முயற்சியை கைவிட்டேன் எனவும் பிறகு மருத்துவரை சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்தேன்.

அதன்  பின்னர் எனது மனதில் இருந்த சுமைகள் எல்லாம் விலகி பழைய நிலைக்கு மாறி விட்டேன் மற்றும் என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்பதனை தெரிவிக்கவே இதனை சொல்கிறேன்  என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *