அரசியல் களத்தில் புதிய திருப்பமாக 6 வருடமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர். மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற எண்ணம்தான் சந்திக்க வைத்திருக்கிறது. அரக்கர்கள் போல செயல்படுபவர்களிடம் இருந்து கட்சியை மீட்போம் என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ், சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். 2017ல் CM பதவியில் இருந்து விலகி, தர்மயுத்தம் நடத்தினார். அப்போது, CM பதவியில் இருந்து விலக டிடிவி தினகரனும் அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பான இன்றைய கூட்டு பேட்டியில் கேள்வி கேட்டதற்கு, ‘பழையதை மறந்துடுங்க’ என்று கூறினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது