தர்காவுக்கு சென்ற குடும்பத்தினர்….. தந்தை- மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம்…. பெரும் சோகம்…..!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் 3 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் தர்காவுக்கு சென்று விட்டு குடகனாற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் பரீத் என்பவரது மகள் மௌபியா(12) குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது மணல் சரிந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷேக் பரீத்(40) மற்றும் ரியாஜுதீன்(38) ஆகிய இருவரும் சிறுமியை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கிய போது அவர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் மூன்று பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.