தரக்கட்டுப்பாட்டு துறையில் எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை! 

ஐ.எஸ்.ஐ., என்ற தரச்சான்று நிறுவனம் பெயர் மாற்றம் கண்டு பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் எனப்படும் பி.ஐ.எஸ்., நிறுவனமாக தற்சமயம் இயங்கி வருவது நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனம் நமது நாட்டின் தலை நகரமான புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன

நிறுவனம் : மத்திய அரசின் பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் தரக்கட்டுப்பாட்டு துறை

வேலை: சயிண்டிஸ்ட் ‘பி’ எனும் பதவியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மெட்டலர்ஜிக்கல் எஞ்சினியரிங், சிவில் எஞ்சினியரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் உட்பட பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளனர்.  

கல்வித் தகுதி : எஞ்சினியரிங் படிப்பில் 60%ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: மார்ச் 31ம் தேதிப்படி வயதி 30-க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை: கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுவுக்கு அழைக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 31.3.2020

மேலதிக தகவல்களுக்கு:  https://bis.gov.in/wp-content/uploads/2020/02/Final-Detailed-Advertisement-for-Website.pdf