நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஓ மை கடவுளே’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் பாக்சர், கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகைகளை வைத்து ஆபாச மீம்ஸ் எல்லாம் போடாதீர்கள் என்று நடிகை ரித்திகா சிங் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் நடிகைகளின் போட்டோக்களை எடிட் செய்து, அதை ஆபாசமாக மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள். இந்த பிரச்சனையில் நானும் சிக்கியுள்ளேன். தயவு செய்து இதுபோல் செய்யாதீர்கள். எங்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.