இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறும் விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட விராட் கோலி தயாராக இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது விராட் கோலியின் தீவிர ரசிகை அவரது கையை இழுத்து பிடித்து செல்பி கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் சில நிமிடம் செல்பி எடுக்க வேண்டும் என விராட் கோலியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு விடாமல் போஸ் கொடுத்தார். எனது மனைவி அங்கே சென்றுவிட்டார் கையை விடுங்கள் எனக் கூறியும் அந்த பெண் போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து விலகி சென்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா விராட் கோலிக்கு வந்த சோதனை என கமெண்ட் செய்து வருகின்றனர்.