தமிழ் வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்….குரூப்-4 தேர்வர்கள் அதிருப்தி…!!!!!

தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்வுகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வில்  பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இந்த இட ஒதுக்கீடு பெற லட்சக்கணக்கானோர் தாங்கள் படித்த பள்ளிகளில் தமிழ்வழி சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனர்.

தேர்வர்களின்  பத்தாம் வகுப்பு பொது தேர்வு சான்றிதழ் அடிப்படையில் பள்ளிகளில் எளிதில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிகளில் தமிழ்வழி சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தேர்வர்களிடம் தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கான மாற்று சான்றிதழ் இல்லை மாற்று சான்றிதழ் வைத்திருந்தவர்கள் அதை உயர்நிலைப் பள்ளிகளில் சேரும் போது கொடுத்துள்ளனர். தற்போது அதன் நகலை வேறு தொடர்புடைய ஆவணங்கள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தமிழ்வழி சான்றிதழ் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண தமிழ்வழி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை எளிதாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பழைய ஆவணங்கள் பதிவேடுகள் அடிப்படையிலோ அல்லது அடையாள ஆவணங்கள் அடிப்படையில் உரிய ஆய்வுகள் செய்து தமிழ்வழி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *