தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகளின் விவரம்…. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக ஆராய்ச்சி தமிழ் அறக்கட்டளை சார்பில் கனகராஜ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசாணைகளை தமிழில் வெளியிடுதல், அரேபிய எண் மொழிக்கு பதில் தமிழ் எண் மொழியை பயன்படுத்துதல், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆராய்வதற்கு அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைத்தல், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன்பிறகு தமிழ் மாதம், தமிழ் ஆண்டு போன்றவற்றை பயன்படுத்தி வருவதாகவும், உலகத் தமிழ் வளர்ச்சி நிறுவனத்தால் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இன்று வரை நிதி ஒதுக்கப்படுகிற்து. இதனையடுத்து கீழமை நீதிமன்றங்களில் அரசாணையானது தமிழில் பதிவு செய்யப்பட்டது, தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு மற்றும் பள்ளிகளில் தமிழ் பாடங்களை நடத்துதல் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சி இயக்குநரகம் அமைக்கப்பட்டது.

அதன்பிறகு தமிழ் அறிஞர்களுக்கு பல்வேறு விதமான விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2019 – 20-ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காக 70 கோடியே 91 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 65 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 -21-ம் ஆண்டில் 63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 53 கோடியே 86 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வழக்கு விசாரணையானது ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.