தமிழ் திரை உலகில்…. அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி யார் தெரியுமா?

பின்னணி பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல ஹிந்தி பாடகியான ஸ்ரேயா கோஷல்.

ஒரு பாட்டுக்கு 3 லட்சத்து 3.50 லட்சம் ரூபாய்வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதிலிருந்து ஹிந்தி படங்களில் பாடி வருகிறார்.

ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா, வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே, அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டக்காரி, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்ற மன்னிப்பாயா ஆகிய பாடல்கள் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களில் சில, தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்களில் ஒரு பாட்டுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த வருடங்களாக சித் ஸ்ரீராம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *