தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கவில்லை…. வானதி சீனிவாசன் பேச்சு…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து புதிதாக பதவியேற்ற இணை அமைச்சர்களின் பட்டியல் குறித்த சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் கொங்குநாடு – தமிழ்நாடு என இடம் பெற்று இருந்தது.

இதனால் சர்ச்சைகள் வெடித்தன. தமிழ் நாட்டை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அனைவரும் குற்றம் சாட்டிய நிலையில் அது எழுத்துப் பிழையால் ஏற்பட்ட தவறு, அதை யாரும் விவாதிக்க வேண்டாம் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை என்று அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆனால் கொங்குப் பகுதி மக்களின் கோரிக்கைகளை எதிர்காலத்தில் மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறதோ? அதை பொறுத்து கொங்குநாடு விஷயத்தில் பரிசீலனைக்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *