மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது தமிழகத்தின் மாதவரம் தொகுதி பாரத் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆள் துணை கிணறுகளை அரசு அமைக்கும் திட்டம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி 58 கோடி மதிப்பில் 1069 குடிநீர் திட்ட பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அந்த மாவட்டத்திற்கு குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.