தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியுக் முன்னேற்றம் அடைய செய்யும் விதமாக வருடம் தோறும் மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 22 ஆம் கல்வியாண்டில் சுமார் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் சிறந்த 3 பள்ளிகளுக்கு அரசு சார்பில் கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டின் பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து, ஏப்.,26க்குள் அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.