
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் உதகையில் மலர்கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளும் வரத்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் உதகை மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில், இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால், கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.