தமிழ்நாட்டில் ஆட்டம் ஆரம்பம்!.. 6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..!!!

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கொழுத்த தொடங்கியுள்ள நிலையில் நேற்று 6 மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி, வேலூர், நாமக்கல், திருப்பத்தூரில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரையில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.