தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்று வதந்தி பரப்பி வருவது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் தற்போது 37,607 அரசு பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 24,350 தொடக்கப் பள்ளிகளும், 6,992 நடுநிலைப் பள்ளிகளும், 3171 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளை பொருத்தவரை 4,829 கடைகள் இருக்கின்றன. 2023 ஜூலை மாதம் 500 கடைகளை தமிழ்நாடு அரசு மூடி உள்ளது. எனவே இத்தகைய பொய்யான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.