தமிழ்நாட்டிற்கும் ஓவியத்துறைக்கும் பேரிழப்பு…. இயக்குனர் நவீன் இரங்கல்….!!!

பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. இளையராஜாவின் திராவிட பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே படத்தில் சிறுவயது பார்த்திபன் ஆகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஓவியர் இளையராஜா மறைவுக்கு இயக்குனர் நவீன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், எங்கள் குடும்ப நண்பர், குடும்பத்தில் ஒருவர், ஓவியர் இளையராஜா நேற்று இரவு கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் நம்மை பிரிந்தார். ஆயில் பெயிண்டிங் என்றால் இளையராஜாதான். அவருக்கு நிகர் எவருமில்லை. அப்படி ஒரு உச்சம் தொட்ட ஓவியர். இது தமிழ் நாட்டிற்கும் ஓவியத் துறைக்கும் பேரிழப்பு என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *