தமிழகத்தில் மின் மீட்டர்கள் தட்டுப்பாட்டால் புதிய வீடு கட்டுபவர்களின் செலவினம் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு மற்றும் பழுதான மீட்டர்களை மாற்ற என லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் வழங்காவிட்டால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

மின்மீட்டர் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக இணைப்பு வழங்கப்படாததால் வீடு கட்டுவோர் அவதி அடைந்துள்ளனர். மின்மீட்டர் பிரச்சனை கட்டண குளறுபடிக்கு வழிவகுக்கும். எனவே மின்சார வாரியத்தால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை விரைந்து தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.