தமிழ்நாடு பட்ஜெட் உரை…. இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதம்….!!!

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் மூலவர் நலத்துறைக்கு முதன்முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகின்றது. இதில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *