2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கு வழங்கப்படவுள்ளது. தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும், திராவிட இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.