சென்ற சில தினங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுக இடையிலான மோதல் உச்சத்தை எட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு என அழைப்பதை விட, தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு” என்பதை புறக்கணித்ததால் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இன்னைக்கு தமிழ்நாடுனு சொல்ல கூடாதுனு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே. அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்” என்று ஆவேசமாக பேசினார். இவரது பேச்சை கேட்ட திமுகவினர் ஆரவாரம் செய்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.