தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வினயரசுவின் மனைவி வி.கோகிலா இன்று காலை இயற்கை எய்தினார். நாளை காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் “தமிழ்க் கொற்றம்” இரத்தினபுரி, ஆழ்வார்திருநகரி இல்லத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும் என வினயரசு அறிவித்துள்ளார்.

வினயரசுவின் மனைவி வி.கோகிலா மறைவுக்கு தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழர் நலன் சார்ந்த மக்கள் பிரச்சனைகளுக்கு வினயரசு குரல் கொடுத்து வருகிறார்.