நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது முதலில் சீமான் வருகை புரிந்தார். அப்போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால் நீராருங் கடலுடுத்த என்ற தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக பாரதிதாசன் எழுதிய வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. முன்னதாக நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்தை மாற்றுவேன் என்று சீமான் கூறி இருந்த நிலையில் தற்போது அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து பதிலாக வேறொரு பாடல் ஒலிபரப்பப்பட்ட நிலையில் அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மாற்றுவேன் என்று கூறியது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக முன்பு கூறியிருந்தார். ஆளுநர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் தமிழ் தாய் வாழ்த்து தவறாக ஒலிபரப்பப்பட்டது.மேலும் தமிழ்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் தொடரும் நிலையில் தற்போது சீமான் தமிழ் தாய் வாழ்த்து முழுவதுமாக மாற்றிவிட்டு வேறொரு பாடலை ஒலிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்ட மேடையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் பாடல் தமிழ்த்தாய் பாடலாக ஒலிக்கப்பட்டது. #தமிழ்நாடுநாள்_2024 pic.twitter.com/RklEagNRNZ
— NTK IT Wing (@_ITWingNTK) November 1, 2024