
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான 2,512 கோடியை வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இது வெளிப்படையான மிரட்டல். இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற எந்த ஒரு அரசும் கல்வியை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தியது இல்லை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் இணையவில்லை என்பதற்காக நமக்கு தரவேண்டிய 2,152 கோடி நிதியை குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு தமிழர் விரோத மத்திய அரசு அளித்துள்ளது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம். கல்வி விடுதலை ஒன்றே நமது மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு தீர்வு தரும் என கூறியுள்ளார்.