தமிழர்களை சீண்டிப் பார்த்தால், தமிழ் உணர்வும், சுயமரியாதையும் வீறுகொண்டு எழும் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர் என் நபி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று பேசியிருந்த நிலையில் தமிழ்நாடு என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. அதோடு மட்டுமில்லாமல் ஆளுநர் மாளிகை சார்பாக வெளியான பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடத்தோடு தமிழ்நாடு அரசின் சின்னத்திற்கு பதிலாக இந்திய அரசின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு வாழ்க என்று கோலமிட்டு கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் பலரும் தமிழ்நாடு வாழ்க என்று கோலமிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்த நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் பேசும்போது, தமிழ்நாடு. தமிழகம் என இரண்டுமே தான் சொல்லிக் கொண்டிருந்தோம். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு என அண்ணா பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது எனக் கூறும் உரிமை யாருக்கும் இல்லை என்றார்.