தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்ததிருந்தது. இந்நிலையில் இது குறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில் , “விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் ரூ.115 முதல் ரூ.120 என 89 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது பரிசீலனையில் உள்ளதால், விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும்.” எனக் கூறியுள்ளார்.