தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறியவும் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்யவும் மாதம்தோறும் அரசு சார்பில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.