தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ளலாம்.

புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் அத்துடன் ரேஷன் கடைகளில் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியாத மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் எனவும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை இந்த முகாமில் தெரிவித்தால் உடனடி தீர்வு கிடைக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.