ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கைரேகை பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் பொருட்கள் வாங்க முடியாது என்ற தகவல் வெளியான நிலையில் கூட்டுறவு துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.