தமிழக ரேஷன் அட்டைதாரர்களே!…. இன்று ஒரு நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.

அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 4.32 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு வாங்காமல் உள்ளனர். மேலும் இதுவரை 2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *