தமிழக முழுவதும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை காண பரிசு தொகுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இலவச வேட்டி சேலையில் நிறம் மற்றும் டிசைன்களை மாற்ற இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க உள்ளதாகவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக முழுவதும் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 14.60 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கவில்லை எனவும் இந்த ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.