தமிழக மின்வாரியத்தில் 56,000 காலி பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் 1,00,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அற்புத புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மின்வாரியத்தில் 1,46,000 பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழக மின்வாரியம் ரூ.1.50 கோடி கடனில் உள்ளது. இதற்கு ஒரு வருடத்திற்கு 16,000 கோடி வட்டி மட்டுமே செலுத்தி வருகிறது. இந்த நிதி நெருக்கடியை சரிசெய்த பின்னர் பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கும் மற்றும் மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் தொடர்பாகவும் பரிசீலித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதையடுத்து மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தரமான மின்கம்பிகள் அமைக்கப்பட்டு  அதற்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 60,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் தற்போதைக்கு நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்றும் தேவையான அளவிற்கு மின் உற்பத்தி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *