தமிழக மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு சிறப்பு வசதி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்க அனைத்துக் கட்சியினரும் திரண்டு செல்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சாய்தளம் மற்றும் கழிப்பறை மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் எனவும் தேர்தல் ஆணையம் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.