சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவை சிகிச்சைக்காக இந்தியா அழைத்து வர ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.