தமிழகத்தில் சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் MRB தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு தமிழக முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவத்துறையில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தற்போது தான் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கான தேர்வு நடந்து முடிந்துள்ளது. விரைவில் இறுதி தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும். அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று வெளியாகி வரும் செய்தி உண்மை இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.