தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை பிற இடங்களுக்கு கடத்துதல் மற்றும் பதுக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசியை முறையாக விநியோகம் செய்யாமல் அதனை பல மாநிலங்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக கடத்துவதாக புகார் அளித்துள்ளது.

இதனை தடுக்க மாநில எல்லைகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் மக்கள் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அரசிடம் புகார் அளிக்க 1800 599 5990 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.