
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 21ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஜனவரி 18ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதை தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.