தமிழக மக்களே… இனிமே கவலை வேண்டாம்… நிம்மதியா இருங்க…!!!

தமிழகத்தில் இன்று 1,120 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 70,620 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 1,34,29,444 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக1,035 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,11,115 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை12,036 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 1,120 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,89,862 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் 9,217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.