தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 4000 பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் சில சமயம் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதால் தமிழக அரசு நிதியில் புதிதாக 2000 பேருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கூடுதலாக 2000 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.