தமிழக போலீசாருக்கு வெளியான திடீர் உத்தரவு….டிஜிபியின் அதிரடி ஆக்ஷன்…!!!!

ராமேஸ்வரத்திற்கு அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 – வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனை போல் கடந்த மாதம் சென்னையில் நடந்த ஆடிட்டர் ஒருவர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்திலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும்  பணியானது தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். இவ்வாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு , காவல் துறை அதிகாரிகளுக்கு அதிரடி  உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் குல்பி, பானிபூரி விற்பவர்கள் உட்பட அனைவரின் விவரங்களும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளி மாநில ஆட்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டட கான்ட்ராக்டர்கள், ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் குல்பி, ஐஸ் விற்று தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில நபர்கள் உட்பட ஒவ்வொருவரின் ஆவணங்களையும் வருகின்ற ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச் சம்பவங்களை தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *