தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவைகளை பெற SETCசெயலை மற்றும் அதிகாரப்பூர்வை இணையதளம் செயல்பட்டு வருகின்றது.
இதன் மூலமாக பயணிகள் பேருந்துகள் மற்றும் இடங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த பேருந்துகளை ட்ராக் செய்யும் வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் அரசு பேருந்துகளை ட்ராக் செய்யும் வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை பேருந்து செயலியில் போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் இடம், குறிப்பிட்ட இடத்தை சென்றடையும் நேரம் ஆகியவை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.