நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43 மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் விரைவில் இந்த விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.