தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 2,04,379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் 75,725 பேர் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *