தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த படத்தை ஒளிபரப்பு அதற்கான இணைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் வேறு படத்தை திரையிடக்கூடாது.

இதற்கான பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன் படத்தை பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கதை சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தில் அடிப்படை பின்னணியை கூற வேண்டும். இது தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றி படத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.