தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2016…… அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள்….!!

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 வெற்றியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கின்றது.

இதில் முதல் 10 இடங்களில் 6ல் திமுகவும், 3ல் அதிமுகவும், 1ல் காங்கிரஸ் கட்சியும் இடம்பிடித்துள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடிப்பவர் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி. இவர்  திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். பன்னீர்செல்வத்தை விட 68,366 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆர். சக்கரபாணி தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் கிட்டுசாமியை விட 65,727 வாக்குகள் அதிகமாக பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன்னை எதிர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சையத் முகமதுவை விட 64,041 வாக்குகள் கூடுதலாக பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏவா.வேலு தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் கே.ராஜனை விட 50,348 வாக்குகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தை பிடித்தார். குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமைச்சர் இ.தங்கமணி தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் யுவராஜை விட 47,329 வாக்குகள் கூடுதலாக பெற்று 5-வது இடத்தை பிடித்தார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஷ்குமார் தன்னை எதிர்த்த பிஜேபி வேட்பாளர் பொன் விஜயராகவனை விட 46,295 வாக்குகள் அதிகமாக பெற்று 6-வது இடத்தை பிடித்தார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தன்னை எதிர்த்த பாமக வேட்பாளர் என். அண்ணாதுரையை விட 42,022 வாக்குகள் கூடுதலாக பெற்று 7-வது இடத்தை பிடித்தார். திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் அசோகனை விட 42,004 வாக்குகள் அதிகமாக பெற்று எட்டாவது இடத்தை பிடித்தார். திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கா.பொன்முடி தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளர் ஜீ.கோதண்டராமனை விட 41,057 வாக்குகள் அதிகமாக பெற்று 9-வது இடத்தை பிடித்தார். பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மனோ தங்கராஜ் தன்னை எதிர்த்து அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.ராஜேந்திர பிரசாத்தை  விட 40,905 வாக்குகள் அதிகம் பெற்று 10-வது இடத்தை பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *