தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்  அடிப்படையில் மாணவர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இடமாறுதல் கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங் நிர்வாக காரணங்களுக்காக டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படும் என்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் நாளை நடத்தப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.