தமிழக ஆசிரியர்களுக்கு…. ஊதியம் குறைப்பு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

மாதந்தோறும் ஊதியம் குறைப்பு என்ற அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சியில் உள்ள இ.ஆர் மேல்நிலைபள்ளியில் நேற்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி , மார்ச் மாதம் நடத்தபட்ட ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 100% எந்த ஒளிவு மறைவின்றி அமைந்ததுற்கு முதல்வருக்கும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கும் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது எனவும்  மாணவர்களின் ஒழுங்கு நிலை மிகவும் தாழ்வாக உள்ளது. மேலும் ஆசிரியர்களை, மாணவர்கள் கத்தியை காட்டி மிரட்டும் நிகழ்வு  எல்லாம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 2009-இல் தமிழக அரசால் அமைக்கப்பட்ட 7வது ஊதிய குழுவில் மேல்நிலை கல்வியில் பணியாற்றுகின்ற  முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பினால், 8வது ஊதிய குழுவிலும் பாதிப்பானது தொடர்ந்து  கொண்டே வருகிறது.

மேலும் 6ம் வகுப்பு கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியரை விட, 11 மற்றும் 12ம் வகுப்பு  எடுக்கும் முதுகலை ஆசிரியர்கள் , சுமார்  3000 ரூபாயை,  ஒவ்வொரு மாத ஊதியத்திலும் குறைவாக பெறக்கூடிய நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. இந்நிலையில் ஊதியக்குழு குறைகளை எல்லாம் களையும்பொருட்டு தமிழக முதல்வர் மீண்டும் ஒரு நபர்க் குழுவினை அமைத்து இந்த குறையைக் களைய வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இக்கூட்டத்தில் மாநில தலைவர் மணிவாசகம், மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ ராம், மாநில தலைமை செயலர் சுவாமிநாதன் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் பேப்டிஸ்டா மெரி இனோ சென்ஷியா உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *