தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 க்குள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலமாக டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனர் அகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆசிரியர்கள் குறைந்தது 10 வருடங்கள் பணி காலத்தை முடித்திருக்க வேண்டும் எனவும் வருடத்திற்கு 7.2 லட்சம் கைக்குள் வருமான பெறுபவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.