தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் இரண்டாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இணையவலியின் மூலம் பதிவிறக்கம் செய்ய ஜூன் 15ஆம் தேதி வரையும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19ஆம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டியை மாணவர்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.